தாராபுரத்தில் சாலையோரத்தில் பாஜக நிர்வாகிகள் மோதிக்கொண்ட விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த கல்லூரி மாணவர் மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி கொங்கு ரமேஷ் என்பவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி மற்றும் கொங்கு ரமேஷ் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி கொங்கு ரமேஷ் இருவரும் சாலையில் கட்டி பிடித்து உருண்ட சம்பவம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சிகள் தாராபுரம் நகரம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் ரமேஷ் ராம் மற்றும் ராஜேந்திரன் என்கின்ற ராம்ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்து மக்கள் கட்சியின் சார்பில் குணசீலன் என்பவரை போலீசார் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், மரக்கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.