கோவை இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை: கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி பகுதியில் நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் இன்று நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பஷீர் அகமது, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சதானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 228 கிராம ஊராட்சிகளிலும் இன்று முதல் ஜூன் 15 வரை நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதன்படி இன்று முதல் 15ம் தேதி முடிய Mass Cleaning அனைத்து பொது இடங்களிலும் தூய்மை காவலர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள், NNS மற்றும் NCC மாணவர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட உள்ளது.
மே 8 ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை உடல் நலம் பேணுதல் தொடர்பாக தூய்மை காவலர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவர்களை கொண்டு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. மேலும் சுத்தம் மற்றும் பசுமை கிராமம் தொடர்பாக MGNREGS பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்படவுள்ளது.
இதனையடுத்து மே 15 முதல் 27ஆம் தேதி வரை நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல், சுகாதாரம் பேணுதல் தொடர்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது.
மே 29 முதல் ஜூன் 03 வரை அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு ஒருமுறை பயன்படுத்தப்பட்ட நெகிழிகளை தடை செய்து அதற்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
முதன்மைக்கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகளை கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதாரம், நீர், கழிவு மேலாண்மை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு அளிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.