மே தினத்தையொட்டி கோவையில் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்பு!

மே மாதம் 1ஆம் தேதியான இன்று தொழிலாளர் தினத்தையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


கோவை: மே தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த இடிகரை போளுவாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சியின் தலைவர் அம்பி என்கிற சதானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம வளர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் நடைபெற்று முடிந்த பணிகள், செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தை திருமணம், திறந்தவெளி கழிப்பிடம் கூடாது என மாவட்ட ஆட்சியர் வாசிக்க பொதுமக்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.



இதனையடுத்து கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கிராம சபை கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் அலமேலு மங்கை, ஊராட்சி செயலர் நாகராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...