முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு ஐ.என்.எஸ் அடையாறு தளத்தில் தடையில்லா சான்று பெறவும், கட்டுமானப் பணிக்காக நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் நினைவாக அவரது இலக்கிய பணிகளை போற்றும் விதமாக, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
இந்த சிலை அமையும் பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியினால் ஆன மேம்பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு கடந்த ஜூன் 20ஆம் தேதி சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும் பொதுப்பணித்துறை பெற்றது.
இதனிடையே பேனா நினைவு சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதிக்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று கருணாநிதியின் நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும். பேனா சின்னம் கட்டுமானப் பணிக்காக நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பது உட்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.