ஆருத்ரா விவகாரத்தில் அவதூறு - 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்ககோரி ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!

ஆருத்ரா விவகாரத்தில் ரூ.84 கோடி பணம் பெற்றதாக தன்னை பற்றி அவதூறு பரப்பிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் ஆர்.எஸ்.பாரதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


சென்னை: ஆருத்ரா விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால், 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்ககோரி பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திமுகவினரின் சொத்துப்பட்டியல் என சில விவரங்களை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட முக்கிய அமைச்சர்களின் பெயர்களில் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இது திமுகவினரின் முதல் கட்ட சொத்து பட்டியல் எனக் கூறிய அண்ணாமலை, இதுகுறித்து, சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்போவதாகவும், கூறியிருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். மேலும், அண்ணாமலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்றால் 500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி என திமுகவினர் பலரும் அடுத்தடுத்து தங்களை பற்றி அண்ணாமலை அவதூறு பரப்பியதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

இதனிடையே ஆருத்ரா விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியிருந்தார். ஆருத்ரா விவகாரத்தில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை, என் மீது அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் மூலமாக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...