கோவையில் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் பங்களிப்பு நிதி பெறுவது குறித்து ஆலோசனை!

கோவை‌ மாநகராட்சியின் பிரதான அலுவலக‌த்தில்‌ ஆணையர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ 2023-24 ஆண்டிற்கான முதலமைச்சரின்‌ ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌, தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களிடம் பங்களிப்பு நிதி பெறுவது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


கோவை: கோவையில் முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் பங்களிப்பு நிதி பெறுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை‌ மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ 2023-24 ஆண்டிற்கான முதலமைச்சரின் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌, தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களிடமிருந்து சமுதாய கூட்டாண்மை பொறுப்பு (CSR) நிதியிலிருந்து பங்களிப்பு பெறுவது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ நடைபெற்ற இந்த கூட்டத்தில், கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையா்‌ பூபால்ரெட்டி‌, கோவை‌ மாநகர காவல்‌ ஆணையா்‌ பாலகிருஷ்ணன்‌‌, கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளா்‌ பத்ரிநாராயணன்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், முதலமைச்சரின்‌ “நமக்கு நாமே” திட்டத்தின்‌ மூலமாக பள்ளி கூடங்கள்‌ மேம்படுத்துதல்‌, பொது சுகாதார மையம்‌ அமைத்தல்‌, கற்றல்‌ மையங்கள்‌ அமைத்தல்,‌ அங்கன்வாடி மையம்‌ அமைத்தல்‌ மற்றும்‌ புனரமைத்தல்‌, சமுதாயக்‌ கூடம்‌ அமைத்தல்‌ மற்றும்‌ புனரமைத்தல்.

பூங்காக்கள்‌ அமைத்தல்‌, பொழுதுபோக்கு மற்றும்‌ விளையாட்டு வசதிகள்‌ ஏற்படுத்துதல்‌, உடற்பயிற்சி கூடம்‌ அமைத்தல்‌, பள்ளி, மருத்துவமனைகள்‌ அருகே கண்காணிப்பு கேமராக்கள்‌ அமைத்தல்‌ போன்ற திட்டங்களை கோவை‌ மாநகராட்சி பகுதிகளில்‌ செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



இந்த திட்டங்களின் மதிப்பீட்டு தொகையில்‌ பொதுமக்களின்‌ பங்களிப்பாக மூன்றில்‌ ஒரு பங்கு தொகை (33%) காசோலையாக வழங்கினால்‌ மீதமுள்ள மூன்றில்‌ இரண்டு பங்கு தொகை (67%) மாநில அரசால்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநகராட்சியால்‌ பணி மேற்கொள்ளப்படும்‌.

கோவை‌ மாநகராட்சி பகுதிகளில்‌ செயல்படுத்திட மதிப்பீட்டு தொகையில்‌ பொதுமக்களின்‌ பங்களிப்பாக பங்கு தொகை (50%) காசோலையாக வழங்கினால்‌, மீதமுள்ள பங்கு தொகை (50%) மாநில அரசால்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநகராட்சியால்‌ பணி மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, 100% பங்களிப்பாகவும்‌ நிதியுதவி வழங்கலாம்‌ எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2022-23ஆம்‌ நிதியாண்டில்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ நமக்கு நாமே திட்டத்தில்‌ ரூ.4.11 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில்‌ ரூ.4.41 கோடி வசூலித்து, இலக்கை விட அதிகமாக பொதுமக்களிடமிருந்து பங்களிப்பு பெறப்பட்டது.

2023-24-ஆம்‌ நிதியாண்டில்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ நமக்கு நாமே திட்டத்தில்‌ ரூ.4.11 கோடி இலக்கு நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. முழு இலக்கை அடைய அனைவரும்‌ ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்ளப்படுவதாக குறிப்பிட்டனர்.

மேலும்‌, காவல்துறை சார்பில்‌ இரு சக்கர மின்சார வாகனங்கள்‌ வாங்குதல்‌, நவீன சோதனை சாவடிகள்‌ அமைத்தல்‌, முக்கிய இடங்களில்‌ உள்ள வாகன நிறுத்தங்களில்‌ Free Lift வசதி, சி.சி.டிவி. கேமராக்கள்‌ பொருத்துதல்‌ உள்ளிட்ட பணிகளுக்கு பங்களிப்பு நிதி வழங்க மாநகர காவல்‌ ஆணையர்‌ மற்றும்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ ஆகியோர்‌ கேட்டுக்‌ கொண்டனர்‌.

எனவே, மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த ஆர்வமுள்ள பொதுமக்கள்‌, நல்வாழ்வு சங்கங்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌, தனியார்‌ தொண்டு நிறுவனங்கள்‌ ஆகியோர்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தாராளமாக நிதியுதவி வழங்க முன்வர வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையர் பிரதாப் கேட்டுக்கொண்டார்‌.

இக்கூட்டத்தில்‌ வருமான வரித்துறை இணை ஆணையர்‌ ஸ்ரீவிஜய்‌‌, வருமான வரித்துறை துணை ஆணையர்‌ கார்த்தி, மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா‌, மாநகர‌ பொறியாளர் இளங்கோவன்‌, தொழில்‌ நிறுவன பிரநிதிகள்‌, தன்னார்வலர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...