உடுமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

மழைப் பொழிவு இல்லாததால் கடந்த சில மாதங்களாக உடுமலை அடுத்த பஞ்சலிங்க அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையில், நேற்றைய தினம் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் உள்ளது பஞ்சலிங்க அருவி. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வன பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகும் கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.

வனப் பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கிறது. வன பகுதியில் ஓடி வருகின்ற ஆறுகள் பஞ்ச லிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது.

வனப்பகுதியில் சிதறி கிடக்கும் பல்வேறு விதமான மூலிகை சருகுகள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதில் கரைந்து விடுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு அருவியின் நீராதாரங்களில் மழை பெய்யவில்லை. ஆனாலும் ஓரளவுக்கு நீர்வரத்து இருந்து வந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு உற்சாகத்தோடு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் சுவற்றை ஒட்டியவாறு தண்ணீர் விழுந்தது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த சூழலில் நேற்றைய தினம் அருவியின் நீராதார பகுதிகளில் திடீரென மழை பெய்தது.



இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கோடை வெப்பத்தை தணிக்க வந்து ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...