கோவை துடியலூரில் பெண்ணிடம் நான்கரை பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற வழக்கில், ஜெகநாதன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவரது கூட்டாளியான சரவணனையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் குஷ்பூ என்பவர் வசித்து வருகிறார். கடந்த 21ம் தேதி வீட்டில் கேட்டினை திறக்கும்போது அவரது கழுத்தில் இருந்த நான்கரை பவுன் தங்க செயினை அடையாளம் தெரியாத 2 நபர்கள் திருடி சென்றனர்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபர், துடியலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய ஜெகநாதன் என்ற நபரை போலீசார் கைது செய்து திருடிய தங்க நகையை கைப்பற்றி ஜெகநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான சரவணனை, விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையில், தலைமறைவாக இருந்த சரவணனை தனிப்படையிர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.