என்னங்க இது, பத்து ரூபாய்   நாணயங்களுக்கு  வந்த சோதனை.!

கள்ளப்பணத்தையும் கருப்பு பணத்தையும் ஒழிக்க பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாட்டு மக்களின் தோள்களை பல்வேறு துயரங்கள் தொற்றிக்கொண்டது. அந்த நேரத்தில் சமூக வலைத்தளங்களை  உபயோகிக்கும் ஒவ்வொருவரும் தங்களை ஒரு ஆட்சியாளர் என கருதிக்கொண்டு, இயன்றவரை வதந்திகளை கொளுத்திப்போட்டனர்.

'புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் ஜி.பி.எஸ். சிப் வைக்கப்பட்டுள்ளது, எங்கு ஒளித்து வைத்தாலும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். விரைவில் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அரசு அறிவிக்கப்போகிறது.' இது போன்று பல போலி அறிவிப்புகள் சமூக  வலைத்தளங்கள் மூலமாக நமக்கு  வந்திருக்கும். அதே நவம்பர் மாதத்தில் தான், 'புதிய பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது' என்ற வதந்தியை நெட்டிசன்கள் கிளம்பிவிட்டனர். மேலும், பத்து ரூபாய் நாணயங்களில் அச்சிடப்பட்டிருக்கும் கோடுகளை வைத்து அது உண்மையானதா? அல்லது போலியா? என்று கண்டுபிடிக்கலாம் என்றும் தங்கள் கற்பனை திறனை கசக்கி வதந்திகளை அல்லி வீசினர். 

இதன் வெளிப்பாடாக, அந்த நாணயங்களில் அச்சிடப்பட்ட கோடுகளை தங்கள்  பொழப்பை கெடுத்து எண்ணும் வேளையில் இறங்கினர் வியாபாரிகள். பெரும்பாலும் சில்லறை வணிகங்களுக்கே பத்து ரூபாய் நாணயங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வதந்தியை தொடர்ந்து, மளிகை கடைகள்  தொடங்கி, பெட்டிக்கடைகள்  வரையிலும் அந்த நாணயங்களுக்கு கடும் எதிர்ப்பு வந்தது. வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் நாணயங்களை 'டிடெக்ட்டிவ் ஆபீசர்' போல் ஆராய்ந்து பின்னார் அதை ரிஜெக்ட் செய்தனர் வியாபாரிகள். 

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்த ஒரு சில நாட்களில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. அதில், 'பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி போலியானது, தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்துது. 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அறியாத மக்கள்  பலர் பத்து ரூபாய் நாணயங்களை  வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மக்கள் யாரும் அந்த நாணயங்களை வாகன மறுக்கும் நிலையில்  சிறு வணிகர்கள் பலர் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதை முற்றுலுமாக நிறுத்திவிட்டனர்.  இந்த நிலை இன்று வரையில் நீடிக்கிறது. செல்லுமா? செல்லாதா? என்று சந்தேகிக்கும் பொது மக்கள் பத்து ரூபாய்க்கான வங்கிக்கு செல்வதா என்று ஏளனம் செய்துவிட புழக்கத்தில்  இருக்க வேண்டிய நாணயங்கள் கோவில் தெப்பக்குளங்களில் நீராடி வருகின்றன. 

பத்து ரூபாய் நாணயங்களும் ஏற்பட்டுள்ள சோதனையை முறையான அறிவிப்பின் மூலம்  அரசு சரி செய்து விட முடியும் என்று சமூக ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர்.     

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...