கோவையில் தனியார் கல்லூரியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்வழித்தடத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், கரட்டுமேடு பகுதியை அடுத்த வழியாம்பாளையம் பகுதியில் எஸ்.என்.எஸ் என்ற பெயரில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியின் வளாகத்தையொட்டி விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்லும் நீர்வழித் தடம் உள்ளது. மழைக் காலங்களில் ஊருக்குள் இருந்து மழை நீரானது இந்த ஓடை வழியாக விவசாய நிலத்துக்குள் பாய்ந்து வரும். இந்த நீரை நம்பி அந்த பகுதியில் வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.



ஆனால், தற்போது இந்த ஓடையை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதுடன், மற்றொரு பகுதி வழியாக கழிவு நீரையும் வெளியேற்றி வருகிறது. மேலும், கல்லூரியின் வெளிப்பகுதியில் நீர் வழித் தடத்தை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாகத்தின் இத்தகைய செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நீர் வழித்தடத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டுத்தரக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த ஓடை தடுக்கப்பட்டால் மழைக் காலத்தில் நீர் வெளியேறாமல் குடியுருப்பு பகுதிக்குள் தண்ணீர்புகும் நிலை ஏற்படும் எனவும், இதனால் இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...