வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட NEET (UG) தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
Coimbatore: நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடத்தப்பட்ட NEET (UG) தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான NEET தேர்வு நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது அந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் பல மாநிலங்களில் எழுந்ததைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற NEET தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவு, தேர்விற்காக பல மாதங்கள் தீவிரமாக தயாராகியிருந்த மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மறு தேர்வு நடத்தப்படுவது மாணவர்களிடம் கூடுதல் மன அழுத்தத்தையும், மருத்துவக் கல்லூரி சேர்க்கை செயல்முறையில் தாமதத்தையும் ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது..