தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சமத்துவ கழக மகளிரணி பொறுப்பாளர் ஆட்சியரிடம் மனு

அன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி சமத்துவ கழக மகளிரணி சார்பில் தாளத்துறை பொறுப்பாளர் ருக்மணி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

அன்னூர் சாலை, பொகளூர், தாளத்துறை தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகில் டாஸ்மாக் கடை எண் 1502 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையினால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். ஆனால், அந்த பட்டியலிலும் இந்த கடை இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு டாஸ்மாக் கடை எண் 1502-ஐ அகற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...