சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் - ரூ.14.10 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.14.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.14.10 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 2 லட்சத்து 821 பேரிடம் இருந்து ரூ.14 கோடியே 10 லட்சத்து 7 ஆயிரத்து 28 அபராதம் வசூலிக்கப்பட்டது. 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் மாதம் வரை 1 லட்சத்து 93 ஆயி ரத்து 949 பேரிடமிருந்து ரூ.11 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரத்து 949 அபராதம் வசூலிக்கப்பட்டது.

2021-2022 ஆம் நிதியாண்டை விட இந்த ஆண்டு 28.02 சதவீதம் அபராம் அதிகமாக வசூலாகியுள்ளது. 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 28 ஆயிரத்து 998 பேரிடமிருந்து ரூ.1 கோடியே 43 லட்சத்து 51 ஆயிரத்து 980 வசூலிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக 558 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 677 வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சேலம் கோட்டத்தில் 2022-2023 ஆண்டில் ரூ.15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...