பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுவந்த பால் விற்பனையாளர் - கோவை அரசு மருத்துவமனையில் பலி

கோவை அரசு மருத்துவமனையில் பாம்புக் கடிக்காக சிகிச்சை பெற்றுவந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பால் விற்பனையாளர் விஜயகுமார் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராசக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது37). பால் விற்பனையாளர். இவர் கடந்த 8 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப்புல் வெட்டியுள்ளார். அப்போது, அங்கு பதுங்யிகிருந்த விஷப்பாம்பு ஒன்று அவரது கையை கடித்துள்ளது.

இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, மருந்துவர்கள் பரிந்துரையை ஏற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகுமார் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...