கோவையில் பர்னிச்சர் கடையில் தீவிபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

கோவை ராம்நகரில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை ராம்நகர் பட்டேல் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் தயாரிப்பு குடோன் உள்ளது.‌

இந்த பர்னிச்சர் குடோனில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று இரவு 7 மணி அளவில் பணிகளை முடித்துக்கொண்டு குடோனை பூட்டி விட்டுச் சென்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் அந்தக் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்து பற்றி எரிந்தது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கோவை தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கோவை தெற்கு, வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சிவராஜ், தனசேகர பாண்டியன் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் குடோனில் பற்றியெரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...