அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியின் வசமாகியுள்ளது.


அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கவும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை வைத்திருந்தார்.

அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பத்து நாட்களில் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு என்பது நாளையோடு முடிவடையுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், ஆணையர்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநில கட்சியாக உள்ள அதிமுகவிற்கு குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க அதிமுக சார்பில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று அதிமுக சார்பில் கர்நாடாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கை அதிமுக பொதுச்செயலாளருக்கும் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய இரண்டுமே தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் வசமாகியுள்ளது.

இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...