திருப்பூரில் வழக்கறிஞருக்கு வாட்ஸ் ஆப் காலில் கொலை மிரட்டல் - பரபரப்பு!

திருப்பூர் கான்வென்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவருக்கு வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வழக்கில் ஆஜராக கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சக வழக்கறிஞர்களுடன் சேர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே இளம் வழக்கறிஞருக்கு வாட்ஸ் அப் கால் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் கான்வென்ட் கார்டன் பகுதியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ஆனந்த் என்கிற பாலசுப்பிரமணி. இவர் திருப்பூர் நீதிமன்றத்தில் இளம் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது தொலைபேசி வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.

அதில் ஆனந்த் பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக பேசியும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே தொடர்பு எண்ணில் இருந்து வாட்ஸப் காலில் வந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட வழக்கிற்கு ஆஜராக கூடாது எனவும் மீறி ஆஜரானால் கோர்ட்டிலேயே கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் மற்றும் திருப்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய சக வழக்கறிஞர்களுடன் இணைந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்துள்ளார்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...