வால்பாறையில் தேசிய மனித உரிமைகள் மன்றம் சார்பில் கருத்தரங்கு கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய மனித உரிமைகள் மன்ற மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமையில், மாநில அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய மனித உரிமைகள் மன்றத்தின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.



வால்பாறை வட்டார தலைவர் குமார் வரவேற்றார், நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.



தேசிய மனித உரிமைகள் மன்றத்தின் தலைவர் கிரிஷ் குமார் கூறுகையில், மலைப்பகுதியில் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை கண்டறிந்து நியாயமான பிரச்சனைகளுக்கான குரல் கொடுக்க வேண்டும். சேவை மனப்பான்மையோடு உதவி செய்யும் நோக்கத்தோடு சிறப்பாக பணியாற்ற வேண்டும்.



பொள்ளாச்சியை தனிமாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலியை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்று பேசினார். மேலும் கேரளா இடுக்கி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் என்ற ஒற்றை யானையை கேரளா அரசு அப்பகுதியிலிருந்து பிடித்து பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு விட விடும்படி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த யானையை பரம்பிக்குளம் வனப்பகுதியில் விட்டால் வனப்பகுதிக்குள் வாழும் பழங்குடியின கிராமங்களில் வாழும் மக்களையும், மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதிகளிலும் வாழும் மக்களையும், அச்சுறுத்தும் என்று அந்த யானையை பரம்பிக்குளம் வனப்பகுதிக்குள் விட வேண்டாம் என்று தமிழக அரசிடம் தெரிவிக்கும்படி வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வத்திடம் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவை தமிழக அரசுக்கு தெரியப்படுத்துவோம் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...