கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 52 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளா் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷாமிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சோந்த பொதுமக்கள் 52 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் கிழக்கு மண்டலத்தில் 10 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 6 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 16 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 4 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 12 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 4 மனுக்களும் ஆக மொத்தம் 52 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.