கோவையில் ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது - 1125 கிலோ அரிசி பறிமுதல்

கோவை ஒத்தகால் மண்டபம் அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்திய நல்ல மணி என்பவரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1125 கிலோ ரேஷன் அரசியை பறிமுதல் செய்தனர்.


கோவை: ஒத்தகால்மண்டபம் அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று ஒத்தகால் மண்டபம்-வழுக்கல் ரோடு குமிட்டிபதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகளில் 1,125 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோவை ஓட்டி வந்த நல்ல மணி (23) என்பவரை கைது செய்தனர்.

மேலும், அரிசி கடத்தல் தொடர்பாக, வேலந்தாவளம் மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...