வால்பாறையில் காலை சிற்றுண்டி கூடம் கட்டுவதற்கான பணிகள் துவக்கம்!

வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 36 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி கூடத்திற்கான பூமி பூஜை மற்றும் கட்டிட பணிகள் வால்பாறை நகராட்சி தலைமை பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது.



கோவை: வால்பாறையில் 36 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி கூடத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வலியுறுத்தி வால்பாறையில் மூன்று இடங்களில் காலை சிற்றுண்டி கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் வால்பாறை பத்தாவது வார்டுக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 36 லட்சம் மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி கூடம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு இன்று வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில், வால்பாறை நகராட்சி தலைமை பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில், நகர கழக செயலாளர் குட்டி (எ) சுதாகர், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.சா. செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர் காமாட்சி, கோழிக்கடை கணேசன் ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிகடை கணேசன், மாவட்ட கழக துணை செயளாலர் ஈ.கா.சி பொன்னுச்சாமி,நகரக் கழக நிர்வாகிகள் சரவணபாண்டியன், டென்சிங்,நகர மன்ற உறுப்பினர்கள் JBR. பாஸ்கர், R.ரவிச்சந்திரன், GKM.மகுடீஸ்வரன், மற்றும் பழக்கடை செல்வம், மணிக்குமார் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...