திருப்பூர் அருகே நொய்யல் ஆற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சோகம்!

திருப்பூர் சிட்கோ பகுதியை சேர்ந்த 7 சிறுவர்கள் விடுமுறை காரணமாக நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற போது, சந்துரு(12) மற்றும் இனியன்(10) என்ற 2 சிறுவர்கள் ஆழத்திற்கு சென்று குளித்த போது சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக திருப்பூர் சிட்கோ அருகேயுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.



இதில் சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு(12) மற்றும் எம். எஸ். நகரை சேர்ந்த இனியன் (10) உள்பட 7 மாணவர்கள் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

தண்ணீர் குறைவாக இருந்ததால், மாணவர்கள் சந்துரு மற்றும் இனியன் ஆழமான இடத்திற்கு சென்று குளித்துள்ளனர். அப்போது இருவரும் சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் சேற்றில் இருந்து வெளியே வரமுடியாமல், நீரில் மூழ்கியுள்ளனர். அப்போது, மற்ற மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் 5 மாணவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.



பின்னர் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கியது தொடர்பாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்த 2 பள்ளி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே பகுதியை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...