கோவை தொழிற்சாலைகளில் இனி முகக்கவசம் கட்டாயம்..! - மாவட்ட நிர்வாகம் அறிவுரை

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களில் தினசரி பாதிப்பு 20 என இருந்த நிலையில், தற்போது 40-க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து தொழிற்சாலை ஊழியர்களும் முக கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.


கோவை: கோவையில் அனைத்து தொழிற்சாலை ஊழியர்களும் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களில் தினசரி பாதிப்பு 20 என இருந்த நிலையில், தற்போது 40-க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அனைத்து தொழிற்சாலைகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அருணா கூறியதாவது:

கோவை, கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் 54 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றி வந்த ஒரு சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தவிர, அனைத்து தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்ற கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் கொரோனா பரவல் இருப்பதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...