என்.டி.சி ஆலைகள் விவகாரம் - ஏப்.20ம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டம் அறிவிப்பு

கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 7 என்டிசி நூற்பாலைகளில் உற்பத்தி தொடங்காததை கண்டித்து வரும் ஏப்.20ம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் என்டிசி நூற்பாலைகளில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஏஐடியுசி நூற்பாலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

தமிழகத்தில் உள்ள 7 ஆலைகள் உட்பட நாடு முழுவதும் 23 என்டிசி நூற்பாலைகள் செயல்பட்டு வந்தன. கொரோனா நோய்தொற்று முதல் அலை பரவிய 2020-ம் ஆண்டு மே 18-ம் தேதி முதல் என்டிசி நூற்பாலைகளில் உற்பத்திகள் நிறுத்தப்பட்டன. மூன்றாண்டுகளாக மீண்டும் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர், செயலர், என்டிசி தலைமை அலுவலக உயரதிகாரிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகளை குறித்து எடுத்துக்கூறி மனு அளித்தும் இதுவரை உற்பத்தி தொடங்கப்படவில்லை.

எனவே, மத்திய அரசை கண்டித்து கோவைக்கு வரும் அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் என்டிசி தொழிலாளர்கள் சார்பில் கருப்புக்கொடி காட்டுவது, ஏப்ரல் 20-ம் தேதி கோவை 5 உட்பட தமிழகத்திலுள்ள 7 என்டிசி நூற்பாலைகளின் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில், எச்எம்எஸ் தொழிற்சங்கம் ராஜாமணி, ஏடிபி கோபால், சிஐடியு பத்மநாபன், ஐஎன்டியுசி பாலசுந்தரம், ஏஐடியுசி சிவசாமி, எம்எல்எப் தியாகராஜன், அப்தேக்கார் சங்கம் நீலமேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...