கோவை அருகே 2வது நாளாக எரியும் காட்டுத் தீ - ஆட்சியர் நேரில் ஆய்வு!

கோவை மாவட்டம் நாதேகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் 2வது நாளாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோவை அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ எரிந்து வருவதை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.

கோவை ஆலந்துறை நாதே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.



சுமார் 150 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஏறத்தாழ 50 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி ஏற்கனவே எரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



இது குறித்து வனத்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், காட்டுத் தீ பரவி வரும் அப்பகுதியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், தீயை அணைக்கும் பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிடம் கேட்டறிந்து, ஆலோசனைகளையும் அவர் அப்போது வழங்கினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...