உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - உடலில் கத்திபோட்டு பக்தர்கள் நூதன வழிபாடு!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பில் ஏராளமான பக்தர்கள் உடம்பில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள், உடம்பில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.

இதனையடுத்து ஏப்ரல் 4ஆம் தேதி கம்பம் போடுதல் மற்றும் கொடி கொடியேற்றம் பூவோடு எடுத்தல் என தினமும் பல்வேறு அலங்கார ஊர்திகளில் அம்மன் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது இந்நிலையில் இன்று தேவாங்கர் சமூக நல மன்றம் சார்பாக உடம்பில் கத்திபோட்டு நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.



பசுபதி வீதி பகுதியில் துவங்கிய ஊர்வலம் தளி ரோடு, தங்கம்மாள் ஓடை, கொல்லம் பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.



மேலும் இந்த கத்தி போடும் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மேள தாள வாத்தியங்கள் முழுங்க தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...