உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலைக்கு அருகேயுள்ள தோட்டத்தில் 30 தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் சாலையை மறித்து நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர்: உடுமலை அருகே சாலையை மறித்து நின்ற யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள திருமூர்த்தி அணை அருகே அதிகாலை 4 மணியளவில் ஓடை வழியாக வந்த குட்டியுடன் வந்த 4 யானைகள், திருமூர்த்திமலை நீச்சல் குளம் அருகே முகாமிட்டன.

பின்னர் அணைக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு, அருகேயுள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்புக்குள் புகுந்து 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதமாக்கியுள்ளன.
இதைத்தொடர்ந்து தோட்டத்தை விட்டு வெளியேறிய யானைகள் திருமூர்த்திமலைக்கு செல்லும் சாலையில் நின்றதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.