தாராபுரத்தில் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலை திருட்டு - போலீசார் விசாரணை!

தாராபுரம் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலையை மர்மநபர்கள் இரவில் திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சியில் இரண்டு நபர்கள், இரவு நேரத்தில் சிலையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



தாராபுரம்: தாராபுரத்தில் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலை திருடு போன சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தென்தாரை பீமராயர் அக்ரஹரர் பகுதியில் ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் உள்ளது.



இந்த கோவிலின் வெளி பிரகாரத்தில் மூன்று திசைகளிலும்ஸ்ரீ இந்திராணி தேவி மகேஸ்வரி தேவி வைஷ்ணவி தேவி ஆகியோரது கற்சிலைகள் சுவரில் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று இரவு கோவில் பூசாரி பிரவீன் குமார் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு இரவு 9 மணி அளவில் கோவில் நடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.



இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது வெளிப்பிரகார சுவரில் இருந்த ஸ்ரீ இந்திராணி தேவியின் சிலையை மட்டும் மர்ம நபர்கள் பீடத்துடன் திருடி சென்று விட்டனர்.

சம்பவம் குறித்து தாராபுரம் போலீசில் பூசாரி பிரவீன் குமார் புகார் செய்ததை அடுத்து தாராபுரம் குற்றப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், பொதுமக்களின் நடமாட்டம் இருந்த இரவு 9:46 மணியளவில் ஸ்கூட்டர் ஒன்றில் வந்த மர்ம நபர் கோவிலை சுற்று சுற்றி வந்ததாகவும் கோவில் திறந்திருந்த பொழுது சிவப்பு உடை அணிந்த ஒரு மர்ம நபர் கோவிலின் உள்பிரகாரத்தில் ஒளிந்து கொண்டு கோவிலின் நடை சாத்திய பின் ஸ்ரீ இந்திராணி சிலையை பீடத்துடன் பெயர்த்து எடுத்து வெளியே நின்று இருந்த நபரிடம் கொடுத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் சிலையை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...