உடுமலை அருகே வண்டல் மண் கொள்ளை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விவல்ல கொண்டாபுரத்தில் குளங்களில் அனுமதியின்றி வண்டல் மண் எடுப்பதாகவும், தடுக்க சென்ற அதிகாரிகளையும் வண்டல் மண் எடுப்பவர்கள் மிரட்டுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே அனுமதியின்றி வண்டல் மண் எடுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விவல்ல கொண்டாபுரம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.



இந்த நிலையில், விவசாயிகள் போர்வையில் திமுக பிரமுகர்கள் மற்றும் ஜேசிபி டிராக்டர் உரிமையாளர்கள் முறைகேடாக ஆணை பெற்று கடந்த சில தினங்களாக வண்டல் மண் எடுத்து ஒரு இடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் விவசாயிகள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்தில் வட்டாட்சியர் கண்ணாமணி ஆய்வு செய்து முறைகேடாக வண்டல் மண் எடுத்தவர்களை எச்சரித்தார்.



மேலும் தொடர்ந்து வண்டல் மண் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில், இன்று வண்டல் மண் அள்ளக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தாலும், காலையிலிருந்து வண்டல் முறைகேடாக டிராக்டர் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் கோட்டாட்சியர் ஜஸ்வந்கண்ணணுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோட்டாட்சியர் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வண்டல் மண் எடுப்பது நிறுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆனால் வண்டல் மண் எடுப்பவர்கள் அமைச்சர், மாவட்டச் செயலாளரிடம் சொல்லி விட்டு எடுக்கிறோம், எங்களுக்கு அனுமதி வழங்கி விட்டார்கள் என வருவாய்த்துறையினரை மிரட்டும் தொணியில் பேசிவிட்டு தொடர்ந்து மண் எடுத்து வருகின்றனர்.

ஆகையால் மாவட்ட ஆட்சியர் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனே வண்டல் மண் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்று திரட்டி நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...