பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்படும்- பண்டாரு தத்தாத்ரேயா

பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் சட்டம் விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அலுவவலர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொண்டு அரசிடம் வைக்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தத்தாத்ரேயா கூறுகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது எனவும், இதற்கான மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

காலத்திற்கு ஒவ்வாத 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டங்களாக ஒருங்கிணைக்கும் சட்ட மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறிய அவர், வரவிருக்கும் கூட்டத்தொடரில் சம்பளம், நிறுவனத்துடன் ஒத்துழைப்பு என இரண்டு மசோதாக்களும் அடுத்த கூட்டத்தொடரில் சமூக பாதுகாப்பு மற்றும் வேலை சூழல், உடல்நலன், பணி பாதுகாப்பு ஆகியவை அடங்கிய இரண்டு சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி ரோஸ்கார் யோஜனா திட்டம் மூலம் புதிதாக பணியில் இணையும் ஜவுளித்துறை ஊழியர்களுக்கு 12 சதவிகித பி.எப் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறிய அவர், இது வழக்கமான 8.33 சதவிகிதத்தை விட கூடுதல் என்பதால் ஜவுளித்துறையில் கூடுதல் பணிகள் மற்றும் தொழில்களை உருவாக்க இது உதவும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...