மெக்சிகோ பெண்ணை மணந்த பொள்ளாச்சி இளைஞர் - உற்சாக நடனமாடி மகிழ்ந்த குடும்பம்!

பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூர் கிராமதைச் சேர்ந்த சாவுத்ரி ராஜ் எனும் இளைஞர், மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த டனியலா எனும் பெண்ணை தமிழ்முறைப்படி திருமணம் செய்துகொண்டது, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குப்பிச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தண்டபாணி கிருஷ்ணவேணி தம்பதி.

டீக்கடைக்காரரான தண்டபாணியின் மகன் சாவுத்ரி ராஜ் கோவையில் படிப்பை முடித்துவிட்டு மெக்சிகோவில் வேலை பார்த்து வந்தார். சாவுத்திரி ராஜ் அங்கு தன்னுடன் மெக்சிகோவில் வேலை பார்க்கும் டனியலா என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்று தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள சாவுத்ரி ராஜ் விரும்பி உள்ளார்.



இதனை அடுத்த, சாவுத்ரிராஜன் குடும்ப முறைப்படி ஆனைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மெக்சிகோ நாட்டு மணப்பெண்ணிற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞருக்கும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மெக்சிகோ நாட்டில் இருந்து பொள்ளாச்சி வந்துள்ளனர்.



திருமணம் முடிந்த நிலையில் இரு விட்டாரும் மகிழ்ச்சியுடன் நடனமாடி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...