உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கும்படி பயணிகள் வலியுறுத்தல்

உடுமலை வழியாக கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்குக் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல்- பாலக்காடு வழித்தடம், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, 2015இல், பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர், மின் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது.

தற்போது உடுமலை ரயில் நிலையம் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாதத்துடன், பள்ளி தேர்வுகள் முடிவடைய உள்ளன.

கோடை விடுமுறை துவங்கியவுடன், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களை அதிகளவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது செல்லும் ரயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

எனவே, கோடைக் காலத்தில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...