கோவை அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பரத், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று நண்பருடன் பைக்கில் பெட்ரோல் போட சென்ற போது, பைக் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் பரத் உயிரிழந்தார்.



கோவை: ஒத்தகால்மண்டபம் அருகே பைக் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் அருகே உள்ள வேடச்சந்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார். பைனான்சியர். இவரது மகன் பரத் (21). இவர் கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று பரத்துடைய நண்பரான குமரேசன் என்பவரது பைக்கில் பெட்ரோல் இல்லை. எனவே பெட்ரோல் போட செல்வதற்காக பரத் தனது பைக் மூலம் குமரேசன் பைக்கின் உதவியோடு சென்று இருந்தார்.

ஒத்தகால்மண்டபம் - ஒக்கிலிபாளையம் ரோட்டில் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த கம்பி வேலி, கல்லில் மோதி நின்றது. இதில் அவருக்கு தலையில் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பரத்தை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பரத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...