பாலக்காட்டில் வெடித் திருவிழா - பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்!

கேரளாவின் பாலக்காடு அருகே நென்மரா மற்றும் வல்லங்கி ஆகிய 2 ஊர்கள் சார்பில் நடைபெற்ற வெடித்திருவிழாவில் பூமி அதிர, வானம் மிளிர பட்டாசுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதறியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.


கேரளா: பாலக்காட்டில் கோலாகலமாக நடைபெற்ற வெடித்திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வெடித்திருவிழாவை கண்டு களித்தனர்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியம்பதி மலை அடிவாரத்தில் நென்மரா மற்றும் வல்லங்கி என்ற 2 ஊர்கள் உள்ளன. இந்த 2 ஊர்களும் இரு தேசங்கள் என கேரள மக்களால் அழைக்கப்படுகிறது.

நென்மராவின் நெல்லிக்குளங்கர பகவதியின் முதன்மை தெய்வம் பிறந்ததை குறிக்கும் வகையில், வெடித்திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவானது, அழகாக அலங்கரிக்கப்பட்ட யானைகள், அன்ன பந்தல் மற்றும் அற்புதமான வானவேடிக்கைகளுக்கு பெயர் பெற்றதாகும்.

பசுமையான பகுதியாக காணப்படும் நென்மரா, வல்லங்கி இரண்டு ஊர்களிலும் அறுவடைக்கு பிறகு நட்பு போட்டியாக தொடங்குகிறது.



இந்த நட்புப் போட்டியின் போது இரு ஊர்கள் சார்பாக, ஊர்வலங்கள் மற்றும் சடங்குகள் ஒன்றையொன்று வின்னையே விஞ்சும் வகையில் நடத்துகின்றனர். "இரு ஊர்களும்" அந்தந்த ஊர்களில் ஒரே மாதிரியான சடங்குகளை செய்கிறார்கள்.

இந்த காலகட்டத்தில், கும்மாட்டி, கரிவேலை போன்ற பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்த்தியும் விழாவினை வியக்க வைக்கும் மூங்கில் மற்றும் மரத்தை பயன்படுத்தி "நென்மரா, வல்லங்கி" இரு ஊர் சார்பாக தனித்தனியாக ஒரு அன்ன பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பந்தல், பல்வேறு வண்ணங்களின் சிறிய பல்புகளால் மின்மயமாக்கப்பட்டுள்ளது.

இது இருப்பிடத்தின் அழகு மட்டுமல்ல, அலங்காரமும் உங்கள் இதயத்தையும் ஈர்க்கும் வண்ணம் போட்டி போட்டுக்கொண்டு அமைக்கின்றனர். இரண்டு ஊர்கள் சார்பாக யானைகளை அணிவகுப்பிற்காக அலங்கரித்து அழகுபடுத்துகின்றனர்.

இந்த ஊர்வலங்கள் முக்கிய இடமான நெல்லி குளங்கரா பகவதி கோயிலை நோக்கி நகர தொடங்குகின்றன. ஊர்வலம் நடந்துகொண்டிருக்கும் போது, சில பாரம்பரிய சடங்குகளுடன் "பஞ்சவாத்தியம்" மற்றும் "பாண்டி மேளம்" ஆகியவற்றை கேரளாவின் சிறந்த கலைஞர்கள் பலர் போட்டி போட்டு இசைக்கின்றனர்.

கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கேரளா, தமிழ்நாடு என இரு மாநிலங்களில் இருந்தும் "குட்டு" விழாவினை பார்க்க வருகிறார்கள். விழாவின் ஒரு பகுதியாக வான வேடிக்கை நடத்தப்படுகிறது.



நேற்று இந்த குட்டு விழாவில் நடைபெற்ற வானவேடிக்கைகள் பார்ப்பவர் கண்களை பிரமிக்க வைக்கும் வகையில், பூமி அதிர, வானம் மிளிர பட்டாசுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதறியது.

இது நென்மரா வல்லங்கி வேளா நாளில் இரவு வானத்தில் சூரியனை சில நிமிடம் நிறுத்திச்செல்கிறது. இரு ஊர் சார்பாக நடந்த இந்த வெடித்திருவிழா, வானவேடிக்கைகளை மிகவும் ஆடம்பரமாகவும் தனித்துவமாகவும் மாற்ற, புதிய மற்றும் வெவ்வேறு வழிகளைக் கண்டறிய முயற்சிகள் செய்து போட்டியில் மக்களை ஈர்த்து வருகின்றனர்.

இரு ஊர்களின் ஆரோக்கியமான போட்டிதான் இந்த வேடிக்கையான மற்றும் உற்சாகமான நிகழ்வின் உணர்வை உருவாக்கியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...