'விபத்தில்லா கோவை' திட்டம் - 6 இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கை முகாம்

கோவை மாவட்டத்தை "விபத்தில்லா கோவை" யாக உருவாக்கும் நோக்கத்தில் மாநகரின் 6 இடங்களில் காவல்துறை சார்பில் சிறப்பு வாகனத் தணிக்கை முகாம் நடத்தப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 348 இருசக்கர வாகன ஓட்டிகளில், 289 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கோவை: கோவை மாநகரத்தில், வாகன விபத்துகள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, "விபத்தில்லா கோவையாக" உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி, கோவை மாநகரில் 6 இடங்களில் (பொள்ளாச்சி ரோடு - ரத்தினம் காலேஜ், பாலக்காடு ரோடு - நேரு காலேஜ், பேரூர் பைபாஸ் ரோடு பி-4 உக்கடம் காவல் நிலையம் முன்பு, பாலசுந்தரம் ரோடு டிராபிக் பார்க் அருகில், அவிநாசி ரோடு கொடீசியா ஜங்ஷன், சத்தி ரோடு அத்திபாளையம் ஐங்ஜன்) சிறப்பு வாகன தணிக்கை முகாம் நடத்தப்பட்டது.



இந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 348 இருசக்கர வாகன ஓட்டிகளில், 289 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.



59 நபர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர் பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டிய 27 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதியப்பட்டது.



மேலும், தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில் (CHILDREN'S TRAFFIC PARK) உள்ள பயிற்சி மையத்தின் மூலமும் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதோடு, தொடர்ந்து வாகனங்களை இயக்கும்போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...