அன்னூர் அருகே தனியார் பேருந்து மரத்தின் மீது மோதி விபத்து - 10 பேர் காயம்!

கோவை - அன்னூர் சாலையில் சென்ற தனியார் பேருந்துக்கு முன்னால் சென்ற பைக் திடீரென வலதுபுறம் திரும்பியதால், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து, சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.


கோவை: அன்னூர் அருகே தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அன்னூர் - கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள எல்லப்பாளையம் பிரிவில் ராஜம் என்ற தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்தை ஓட்டுநர் கார்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார்.



அப்போது, எதிரே வந்த பைக் திடீரென வலதுபுறம் திரும்பியதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...