சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் வெறிச்சோடி காணப்படும் உடுமலை பஞ்சலிங்க அருவி!

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வெயில் அதிகரித்துள்ளதன் காரணமாகவும், பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வுகள் காரணமாகவும், உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.



திருப்பூர்: உடுமலை அருகே பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமண லிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.



இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீக வாதிகள் என பலரும் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.



இங்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். வெயில் காரணமாக அருவியில் மிதமான அளவே தண்ணீர் கொட்டுகிறது. மேலும் தற்போது பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் நடந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.

இதனால் பஞ்சலிங்க அருவி வெறிச்சோடி கிடக்கிறது. கடும் வெயில் கொளுத்துவதால் உள்ளுர் மக்கள் மட்டும் அவ்வப்போது வந்து குளித்து செல்கின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...