தாராபுரம் அருகே மூலனூரில் பருத்தி ஏலம் - ரூ.1.20 கோடிக்கு பருத்தி விற்பனை

தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலகத்தில் ரூ.1,20 கோடிக்கு பருத்தி விற்பனையானது. வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8099ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 6100-ம், சராசரி விலையாக ரூ.7150ம் நிர்ணயிக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதில், திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 619 விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்திருந்தனர்.

இவற்றை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு, சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8099ம், குறைந்தபட்ச விலையாக ரூ.6100-ம், சராசரி விலையாக ரூ.7150ம் நிர்ணயிக்கப்பட்டது.



அதன்படி 5473 மூட்டை பருத்தி(குவிண்டால் 1701.44) ரூபாய் 1,20,91,276/-க்கு 22 வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். இந்தத் தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.

ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...