அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.25 லட்சத்திற்கு ஏலம் போன மக்காச்சோளம்!

திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த 19000 கிலோ அளவிலான மக்காசோளம், அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட வியாபாரிகளால், ரூ.4.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.25 லட்சத்திற்கு மக்கோசோளம் ஏலம் எடுக்கப்பட்டது.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான அலங்கியம், தளவாய்பட்டினம், சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில். , மக்காச்சோளத்தை அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

திருப்பூர், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவ்வாறு, மொத்தம் 19,000 கிலோ அளவிலான மக்காச்சோளம் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதனை வாங்க திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர் அப்போது அதிகபட்சமாக குவிண்டால் 2,211 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 2,202 ரூபாய்க்கும் விலை போனது. இந்த நிலையில் இன்று, மொத்தமாக ரூ.4.25 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் போனது.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் அருள் குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...