பல்லடத்தில் டூரிஸ்ட் வேனை அதிவேகத்தில் இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திருச்சி-கோவை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று தாராபுரத்தில் இருந்து பல்லடம் வழியாக கோவைக்கு அதிவேகமாக தனியார் டூரிஸ்ட் வேனை இயக்கிய ஓட்டுநருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.



திருப்பூர்: பல்லடத்தில் வேகமாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் தனியார் டூரிஸ்ட் வேன் ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாராபுரத்தில் இருந்து பல்லடம் வழியாக கோவையை நோக்கி தனியார் டூரிஸ்ட் வேன் அதிவேகத்தில் இயக்கப்பட்டது.



இதையடுத்து அந்த வேனை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். 



அதிகவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ராஜ்குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.



பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும், அதிவேகமாக வாகனத்தை இயக்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

அதிவேகமாக இனி வாகனத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர் ராஜ்குமாரை எச்சரித்தும் அனுப்பினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...