கோவையில் கல்லூரி மாணவிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி

தமிழகத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தனியார் கல்லூரி மாணவிகள் சென்னை வரை மேற்கொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கோவையில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.



கோவை: தமிழகத்தில் பசுமை பரப்பளவு அடர்த்தி குறைவாக உள்ளது என்ற புள்ளி விவரங்கள் வெளியான நிலையில், இயற்கை சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து மரங்களை வளர்க்க வேண்டும், சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் கோவையில் இருந்து சென்னை வரை இரு சக்கர வாகனத்தில் செல்லும் விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியை, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இன்று துவங்கிய பேரணி நாளை இரவு சென்னையில் நிறைவடைய உள்ளது. செல்லும் வழியில் உள்ள காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிகளையும் சந்தித்து விழிப்புணர்வு குறித்து தெரிவித்து செல்கின்றனர்.



இதேபோல கிராமங்களில் மரங்கள் வளர்ப்பு குறித்தும் மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...