ரேட்டிங் என்ற பெயரில் சீட்டிங் - இளைஞரிடம் சைபர் கிரிமினல்கள் நூதன மோசடி

பிரபல வணிக தளத்தில் பொருட்களுக்கு ரேட்டிங் தரும் பணியில் ஈடுபட்டால் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி 28 ஆயிரம் வரையில் முதலீடு செய்து கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சத்யநாதன் என்பவர் ஏமாந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் இளைஞர் சத்யநாதன். இவர் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. அதில் ஆன்லைன் முதலீடு குறித்த விளக்கம் தரப்பட்டிருக்கின்றது. பிரபல வணிக தளத்தில் பொருட்களுக்கு ரேட்டிங் தரும் பணியில் ஈடுபட்டால் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை நம்பி வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்த அந்த நபர், அவர்கள் கேட்ட விவரங்களை பூர்த்தி செய்து இருக்கிறார். டாஸ்க் தரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2000 ரூபாய் முதலீடு செய்து 2900 ரூபாயை பெற்றிருக்கின்றார். லாபம் அதிகம் கிடைப்பதாக நினைத்து அடுத்தடுத்த பாஸ்டில் ஈடுபட நினைத்த சத்தியநாதன் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை இகாமர்ஸ் வலைதளத்தில் முதலீடு செய்திருக்கின்றார்.

ஒரே மாதத்தில் சத்தியநாதன் ஏழு தவணையாக இந்த தொகையை ஆன்லைனில் செலுத்தி இருக்கின்றார். இந்த நிலையில் முதலீடு செய்த பணத்தை, டாஸ்கை முடித்துவிட்டு எடுக்கலாம் என நினைத்தபொழுது பணத்தை எடுக்க முடியவில்லை. அப்போதே சத்தியநாதன் சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கின்றார். உடனடியாக சைபர் காவல் நிலையத்தில் பணத்தை பறிகொடுத்த அவர் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிட்டி சைபர் கிரைம் போலீசார், வங்கி கணக்குகள் விவரங்களை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சீட்டிங், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...