கோவையில் இருந்து ஆளுநருக்கு சாம்பல் அனுப்ப முயன்ற த.பெ.தி.க.,வினர் கைது!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு, இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களின் சாம்பலை கோவையில் இருந்து அனுப்ப முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையொப்பம் இடாமல் இருந்து வரும் நிலையில் ஆளுநருக்கு பல்வேறு கட்சிகள் அமைப்புகள் கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆளுநருக்கு இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களை நினைவுப்படுத்துகின்ற வகையில் சாம்பல் அனுப்பும் நூதன போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



அதன்படி, தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சாம்பலை அனுப்புவதற்காக தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். அப்போது, ஆளுநருக்கு எதிரான கண்டன பதாகைகள், ஆளுநர் புகைப்படம் பொறித்த மாதிரி ரம்மி சீட்டுகள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.



பின்னர் அந்த மாதிரி ரம்மி சீட்டுகளை கிழித்தெரிந்தனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

அப்போது செய்தியாளர்களிடம் கு.இராமகிருட்டிணன் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற பல்வேறு மக்கள் நலன் மசோதாக்களை நிறைவேற்றாமல் தமிழக ஆளுநர் புறக்கணித்து தாமதப்படுத்தி வருவகிறார். இறுதியில் தமிழ்நாடு அரசிற்கு அதிகாரம் இல்லை என கூறி வருகிறார்.அப்படிப்பட்ட ஒரு மசோதாவான ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்கின்ற மசோதாவை நிறைவேற்றாமல் ஆறு மாத காலம் கிடப்பில் போட்டுவிட்டு இறுதியாக தமிழ்நாடு அரசிற்கு அதற்கு அதிகாரம் இல்லை என்ற கருத்தை ஆளுநர் பதிவு செய்துள்ளார்.

ஆளுநருக்கு தான் இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு மனமில்லை. ஆன்லைன் ரம்மி நிறுவனத்தினரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தமிழகத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை ஆளுநருக்கு உணர்த்துகின்ற வகையிலும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தந்தை பெரியார் திராவிட கழகம் ஆளுநருக்கு சாம்பல் அனுப்புகின்ற போராட்டத்தை நடத்துகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...