தாராபுரத்தில் போலீசாருக்கு தொப்பி வழங்கிய டிஎஸ்பி தனராசு!

தாராபுரத்தில் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில், சோலார் மூலம் தலைக்கு குளுமை தரக்கூடிய வட்ட வடிவமான தொப்பியை டிஎஸ்பி தனராசு வழங்கினார்.



திருப்பூர்: தாராபுரத்தில் போக்குவரத்து போலீசாருக்கு டிஎஸ்பி தனராசு தொப்பிகளை வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, அலங்கியம் மற்றும் உடுமலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதியில் இரவும் பகலும் பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தலையில் அரசு முத்திரை பதித்த தொப்பியைப் பயன்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அக்னி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அவ்வாறு போலீசார் அணிந்துள்ள தொப்பி சூடேறி போலீசார் பாதுகாப்பு பணியின் போது மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.



இந்நிலையில் போக்குவரத்து போலீசாரின் நிலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தாராபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலை, பாதுகாக்கும் சோலாரை உறிஞ்சி தலைக்கு குளுமை தரக்கூடிய வட்ட வடிவமான தொப்பியை தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு போலீசாருக்கு வழங்கி நீர்மோர் கொடுத்தார்.

அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...