மடத்துக்குளம் அடுத்த ஜோதம்பட்டி அருகே சாலையோர குப்பைகளில் வைக்கப்பட்ட தீ, ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் கரும்பு காட்டுக்கு பரவிய நிலையில், அங்கிருந்த விவசாயிகள் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ கரும்பு காட்டுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆஸ்பத்திரி மேடு பகுதியில் ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பானது, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் பயிரிடப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே பயிரிடப்பட்ட கரும்புகள் அடுத்த மாதம் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சூழலில், காய்ந்த சருகுகளில் கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென்று என்று தீ பரவியுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஒன்றுகூடி, அடுத்தடுத்த கரும்பு காடுகளுக்கு தீ பரவாதவாறு தண்ணீர் ஊற்றி கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைத்தனர்.
இதனை அறிந்த வேளாண்துறை, வருவாய்த்துறை மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், 100 அடி தூரத்திற்க்கு சாலை ஓரத்தில், குப்பைகள் கொட்டப்பட்டு, பாதுகாப்பின்றி தீ வைத்து எரிக்கப்படுவதால், அதிலிருந்து கரும்பு காட்டிற்கும் தீ பரவியதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த விவசாயிகள், கணியூர் காவல் நிலையத்தில், குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சேதம் அடைந்த கரும்பு பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இது போன்ற விபத்துக்கள் இனிமேலும் நடக்காமல், தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் மனு அளித்துள்ளனர்.