கோவையில் குடும்பத்தகராறில் மகன் மாயம் - தந்தை காவல் நிலையத்தில் புகார்

கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனியை சேர்ந்த கண்ணன் என்பவரை காணவில்லை என, அவரது தந்தை வடிவேல் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் குடியிருந்து வருபவர் வடிவேல், இவரது 48 வயது மகன் கண்ணன், தங்க நகை வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மேலும், கண்ணன் குடிக்கு அடிமையானவர் என தெரிகிறது. இதன் காரணமாக இவரது தந்தைக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது கோவித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்ற கண்ணன், வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதையடுத்து அக்கம், பக்கம் மற்றும் நண்பர்கள், உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை வடிவேல் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் காணாமல் போன கண்ணனை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...