நெருக்கடியைக் கண்டித்து ஒரு நாள் முழுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பல்வேறு நெருக்கடியான வேலைப் பணிகள் விதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், தமிக அரசால் அமல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு இத்துறையைச் சார்ந்தவர்களையே அதிகமாகவும், நேர வரையரை இன்று வேலை வாங்குவதாகவும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து, மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்காமல், பதிவேடுகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவதாகவும், அதனை எழியமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிநபர் கழிப்பறை, கால்நடை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எங்கள் துறை ஊழியர்கள் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைப்பழுவை மட்டுமே தினித்து வருவதாகவும், அரசு விடுமுறை நாட்களிலும் ஏதேனும் கூட்டம் அல்லது நிகழ்ச்சி வைத்து ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைப்பதாகவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இத்தகைய ஊழியர் விரோதப் போக்கை தடுக்கக்கோரி இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...