தாராபுரம் அடுத்த காசிலிங்கம் பாளையம் நாவீதன் புதூரை சேர்ந்த மயிலால் என்பவருக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதை மீட்டு தரக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தங்களது நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதை மீட்டு தர வலியுறுத்தி ஒரு குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தாராபுரம் காசிலிங்கம்பாளையம் நாவீதன் புதூரை சேர்ந்த மயிலால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்து, தங்களது நிலத்தை சட்ட விரோதமாக தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதாக ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
எனக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தையும் சேர்த்து அப்பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவர் கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளார்.
அந்த கம்பி வேலிக்குள் பொது குடிநீர் குழாய் உள்ளதால், ஊரைச் சுற்றிக்கொண்டு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதனால், அரசு அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தி, ஆக்கிரமித்து அமைத்துள்ள கம்பிவேலியை அகற்றி தண்ணீர் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், எங்கள் பகுதிக்குள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து அடிக்கடி மிரட்டுகிறார்கள். கோவில் இடத்திற்கு நாங்கள் வரக்கூடாது என்றும் அடக்கு முறையை கையாண்டு வருகிறார்கள் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.