வடவள்ளி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு - சாலை மறியலில் ஈடுபடவும் பொதுமக்கள் முடிவு!

வடவள்ளி அருகேயுள்ள லட்சுமி நகரில் குடியிருப்புக்கு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், காவல் நிலையத்திலும்,மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்க உள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை வடவள்ளியை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் இன்று காலை தனியாருக்கு செந்தமான இடத்தில் பொக்லைன் கொண்டு ஆழமாக குழி தோண்டும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து அருகில் குடியிருப்பவர்கள் கேட்டபோது, செல்போன் டவர் அமைக்க வேலை நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் லட்சுமி நகர் குடியிருப்பு சங்கத்தினர் வாட்ஸ்அப் குழுவில் பரவியது.

இதனையடுத்து, சிறிது நேரத்தில் அனைத்து குடியிருப்பு வாசிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் கிணறு இருந்ததாகவும், செல்போன் டவர் அமைத்தால் இங்கு வசிக்கும் கர்ப்பிணி பெண்கள், மற்றும் பறவைகள் கதிர் வீச்சால் பாதிக்கப்படும் என்று கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த வடவள்ளி காவல் நிலைய போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து உடனடியாக பணியை நிறுத்த வேண்டும் வலியுறுத்தினர்.

மேலும், நாளை வடவள்ளி காவல் நிலையம் மற்றும் மாவட்டம் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட உள்ளதாகவும் குடியிருப்பு சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மறியலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...