மூலனூர் ஒன்றியத்தில் ரூ.4.51 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 51 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



திருப்பூர்: மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 51 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 51 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



கன்னிவாடி பேரூராட்சி வார்டு எண்.9ல் ஒரு கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் வாராந்திர ஆட்டுச்சந்தை மேம்படுத்தும் பணிகளும், ரூ.73.50 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளகோவில் ரோடு-வேளாண்துறை ரோடு பழுதடைந்த தார்ச்சாலையைப் பலப்படுத்துதல் பணிகளையும், மூலனூர் பேரூராட்சி ஏசு வீதியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், மூலனூர் பேரூராட்சி சோமகோட்டை பிரிவில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் கரூர்-தாராபுரம் சாலை முதல் ஊரநாயக்கன்வலசு புதிய பழைய காலனி வரை தார்ச்சாலை பணிகளையும்,

கொளத்துப்பாளையம் பேரூராட்சி டி.காளி பாளையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கரூர் சாலை முதல் துளிப்கிளாத்திங் மில் மண்சாலையை தார்ச்சாலையாக அமைக்கும் பணிகளையும், மீனாட்சி நகர் பூங்காவில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட புதிய அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கும் உரலகம் அமைக்கும் பணிகளையும், ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் மறுசுழற்சி பொருட்கள் சேகரிப்பு மையம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10.50லட்சம் மதிப்பீட்டில் சி.சி.டிவி கேமரா அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் துவங்கி வைத்தனர்.



இதன் தொடர்ச்சியாக வருவாய்த்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினர்.



இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பே. சாமிநாதன், திருப்பூர் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்கள் யாரும் தாக்கப்படவில்லை எனவும், வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு முழுவதும் பரவி வரும் செய்தி பொய்யாகச் சித்தரிக்கப்பட்டது எனவும், மேலும் இது போன்ற சித்தரிப்பு காட்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

மேலும் வட மாநிலத்தவர் யாரும் பயப்படத் தேவையில்லை. திமுக அரசு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும். நாளை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...